ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகை ஜோதிகா
பப்ளியாக, குண்டாக இருந்தாலும் அவரை நாங்கள் கொண்டாடுவோம் என ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர் தான் நடிகை ஜோதிகா.
பிரியதர்ஷன் இயக்கிய டோலி சஜா கே ரத்னா என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய ஜோதிகா அஜித்தி வாலி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் குஷி, அர்ஜுனுடன் ரிதம், கமல்ஹாசனுடன் தெனாலி, சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார்.
ரஜினியுடன் ஜோதிகா நடித்த சந்தரமுகி திரைப்படம் அவரின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது அவருடன் காதல் ஏற்பட இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.
சொத்து மதிப்பு
இப்போதும் ஒரு படத்துக்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். அதுமட்டும் இல்லாமல் விளம்பரங்கள் மூலமும் அவருக்கு கோடிகளில் வருமானம் கிடைக்கிறது.
சென்னையில் பெரிய பங்களா, BMW கார்கள் என ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ. 300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.