ஹிந்தி, மலையாள சினிமாவில் அந்த விஷயம் உள்ளது, ஆனால் தமிழில் இல்லை- ஜோதிகா ஓபன் டாக்
ஜோதிகா-சூர்யா
தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.
இவர்கள் இருவருமே சினிமாவில் மிகவும் ஆக்டீவாக நடித்து வருகிறார்கள். ஜோதிகா மலையாளத்தில் மட்முட்டியுடன் இணைந்து நடித்த காதல் தி கோர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
அதேபோல் சூர்யாவும் கங்குவா படப்பிடிப்பில் உள்ளார். அண்மையில் படப்பிடிப்பில் அவருக்கு காயம் எற்பட தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.
நடிகையின் பேட்டி
பெண்களை மையப்படுத்தி அதிக கதைகள் வர வேண்டும், அதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன்.
ஹிந்தி மற்றும் மலையாளத்தில் அப்படி பெண்களை மையப்படுத்தி கதைகள் வருகிறது, ஆனால் தமிழில் அப்படி இல்லை, வருத்தம் அளிக்கிறது.
இளம் இயக்குனர்கள் மட்டுமே பெண்களுக்காக கதையை இயக்குகிறார்கள், முன்னணி இயக்குனர்களும் இயக்க வேண்டும் என பேசியுள்ளார்.