வீடு போலவே இருக்க கேரவனை பல லட்சம் செலவில் மாற்றியுள்ள கங்கனா- இத்தனை லட்சமா?
நடிகை கங்கனா
பாலிவுட் சினிமாவில் தனது சினிமா பயணத்தை முன்னணி நாயகர்களுக்கு இணையாக கொண்டு சென்றவர் நடிகை கங்கனா.
மிகவும் துணிச்சலான, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து தேசிய விருது எல்லாம் பெற்றிருக்கிறார்.
இப்போது இவர் தமிழில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் கூட முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் லீக் ஆகியிருந்தது.

கேரவன்
பிரபலங்கள் எங்கு படப்பிடிப்பு சென்றாலும் அவர்களுக்கு முக்கியமாக தேவைப்படுவது கேரவன்.
இந்த கேரவன் தனது சொந்த வீடு போல் இருக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரூ.65 லட்சம் செலவு செய்து வேனின் உள்கட்டமைப்பு வசதிகளை கங்கனா மாற்றி அமைத்திருக்கிறார்.
இவரை தாண்டி ஷாருக்கானின் கேரவன் மதிப்பு ரூ. 5 கோடி, சல்மானின் கேரவன் ரூ. 4 கோடியும், ஹிருத்திக் ரோஷன் ரூ. 3 கோடி செலவில் கேரவன் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின் சகோதரியை பார்த்தீர்களா?- வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri