அதிரடியாக சம்பளத்தை உயர்த்தினாரா நடிகை கீர்த்தி சுரேஷ்?- இத்தனை கோடியா?
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட ஒரு பிரபலம்.
சினிமா துறையில் உள்ள குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற்று வருகிறார்.
அவர் நடித்ததில் மிகவும் சிறந்த படம் என்றால் நடிகையர் திலகம் என்ற படத்தை கூறலாம். இப்படத்திற்காக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் அப்படியே பல மடங்கு உயர்ந்தது.
விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுசுடன் தொடரி, ரஜினிகாந்துடன் அண்ணாத்த என்று பெரிய நடிகர்கள் படங்களில் தொடர்ந்து நடித்தார்.

சம்பள விவரம்
அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி இருந்தது.
தற்போது அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் கீர்த்தி சுரேஷ் ரூ. 2 கோடி வாங்கி வந்தவர் தற்போது ரூ. 3 கோடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட கண்ணிவெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

11 கிலோ வரை உடல் எடையை குறைக்க நடிகை சமீரா ரெட்டி என்ன செய்தார் தெரியுமா?