11 கிலோ வரை உடல் எடையை குறைக்க நடிகை சமீரா ரெட்டி என்ன செய்தார் தெரியுமா?
சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் என்ற ஒரே படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. அதன்பிறகு அவர் தமிழில் சில படங்கள் நடிக்க சரியான ரீச் பெறவில்லை.
தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் படங்கள் நடித்துள்ள இவர் 2014ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அவ்வப்போது தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
Weight Loss
சமீரா ரெட்டி தேர்வு செய்த டயட் இண்டர்மீடியட் ஃபாஸ்டிங், நல்ல ரிசல்ட் கிடைக்க நிச்சயம் இதை ட்ரை செய்யலாம் என்கிறார். நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் சாப்பிடாமல் விரதம் இருப்பாராம்.
இரவு டின்னர் 7 மணிக்குள் முடித்து விடுவாராம், பின்பு மறுநாள் மதியம் வரை உணவு எடுத்து கொள்ளாமல் பழங்கள், ஜுஸ், தண்ணீர் மட்டும் தான் குடிப்பாராம்.
பின்பு மதியம் காய்கறி நிறைந்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுவாராம். சரியாக 1 மணி நேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்கி விடுவாராம், யோகா, வொர்க்கவுட்ஸ் என தினமும் மாறி மாறி சமீரா செய்வாராம்.
காலை நேரத்தில் வாக்கிங் உடல் சதையை குறைக்க பெரிதும் உதவியதாம்.
சீக்ரெட்டாக இன்னொரு திருமணம் செய்துகொண்டேன்- வனிதா விஜயகுமார்

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
