நடிகை குஷ்பு வீட்டில் நேர்ந்த திடீர் உயிரிழப்பு- கடும் சோகத்தில் பிரபலம்
நடிகை குஷ்பு
90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பார், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.
1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கியவரின் பயணம் இப்போது வரை தொடர்ந்து வருகிறது. கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்தார், ஆனால் அவரது காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை.
நடிகை வீட்டில் சோகம்
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக அவர்களது வீட்டில் வளர்ந்த நாய் இப்போது இல்லையாம். குஷ்பு டுவிட்டரில், கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் எங்களில் ஒருவராய் நீ இருந்தாய். ஒரு கூச்ச சுபாவம் உள்ள நாய்க்குட்டியாக எங்களிடம் வந்த நீ எங்கள் இதயத்தில் நீங்கா இடம் நீ விட்டாய்.
உனது புரிதல், நீ காட்டும் நிபந்தனையற்ற அன்பு, உன் புன்னகை, கோபம், பாதுகாக்கும் இயல்பு உள்ளிட்ட அனைத்து குணங்கள் எங்கள் மனதை கவர்ந்தது. உன் இறப்பால் நாங்கள் மனமுடைந்து போய் உள்ளோம்.
நீ நிம்மதியாக இருப்பாய் என நம்புகிறோம். மிஸ் யூ ஸ்நூபி. உன்னை போல் யாரும் இருக்க முடியாது. ஐ லவ் யூ பட்டு. கடவுளே தயவு செய்து அவனை பார்த்துக்கொள் என்று கூறியிருக்கிறார்.
You were part of us for almost 12 long years. You came in as a shy little kid but became our heartthrob. Your understanding, unconditional love, your smile, tantrums at times, protective nature and the most obedient nature was heart melting. You have left us heartbroken. Hope you… pic.twitter.com/DJXUWEQL15
— KhushbuSundar (@khushsundar) April 27, 2023
பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய கோபி- அவருக்கு பதில் இவரா, வெளிவந்த விவரம்