Toxic படம் தோல்வியடைந்த போது நான்... வருத்தத்துடன் கூறிய நடிகை கியாரா அத்வானி
படம்
இந்திய சினிமாவில் ஒரு படம் ஜெயிக்க வேண்டும் என்றால் முன்பெல்லாம் அப்பட நாயகன், நாயகி, இசை அல்லது பட்ஜெட் என பல விஷயங்கள் உதவியது.
இப்போது உள்ள டிரெண்டில் புதிய படம் ஒன்று மக்களால் கொண்டாடப்படுவது என்றால் அதற்கு ஒரே காரணமாக இருக்கிறது கதை. இப்போதெல்லாம் கதை சூப்பராக இருக்கிறதா, அந்த படம் ஹிட் தான்.
அப்படி இந்த வருடம் தமிழ் சினிமாவில் பல சின்ன பட்ஜெட், இளம் கலைஞர்கள் நடித்த படங்கள் சூப்பர் ஹிட்.
கியாரா அத்வானி
அப்படி ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியாகி படு மோசமான தோல்வி படமாக அமைந்தது டாக்சிக். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் டாக்ஸிக். இதில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நயன்தாரா என பலர் நடித்திருந்தார்கள்.
பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு நிறைய மோசமான விமர்சனங்கள் வரவே சுத்தமாக ஓடவில்லை. அதிலும் யஷ்-கியாரா அத்வானி நெருக்கமாக நடித்த காட்சிகள் எல்லாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மன வேதனை
ஹிந்தியில் காபி வித் கரண் என்ற ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்ட நடிகை கியாரா அத்வானி பேசும்போது, டாக்சிக் திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறாதது அதிர்ச்சியாக இருந்தது.

அந்த முதல் வார இறுதியில் நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். இருப்பினும் எனது வழக்கமான பாணியிலிருந்து விலகி சவாலான கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பாராட்டுக்கள் கிடைத்தது, அது எனக்கு ஆறுதல் அளித்தது என்றார்.
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
சர்ச்சையில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏ.க்கள் - கடைசியாக சந்தித்து எச்சரித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri