பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 இதுவரை செய்துள்ள பட வசூல்...
மூக்குத்தி அம்மன் 2
Mookuthi Amman 2 Box Office: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் சூப்பர் ஹிட்.
அப்படத்தை மையமாக வைத்து நயன்தாராவை வைத்து சுந்தர்.சி இயக்கத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியாகி இருக்கிறது. இதுபோன்ற ஜானரில் கதை இயக்குவதில் சுந்தர்.சி கிங் என்பது தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும்.

நயன்தாராவுடன், ஊர்வசி, ரெஜினா, சினேகா, இனியா, யோகி பாபு, விச்சு என பலர் நடித்திருக்கிறார்கள். வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.
விமர்சனம்
பெரிய எதிர்ப்பார்ப்புடன் இப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு படம் ஓரளவிற்கு தான் பிடித்துள்ளது என்று கூறலாம். சிஜி ஒர்க், திரைக்கதை, மேக்கிங்கில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பது ரசிகர்களின் விமர்சனமாக இருந்தது.

வசூல் விவரம்
கடந்த நவம்பர் 6ம் தேதி வெளியான இப்படம் 6 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 27 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம்.
சர்ச்சையில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏ.க்கள் - கடைசியாக சந்தித்து எச்சரித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu