மீனாவிற்கு மறுமணமா, அவர் ஒரு பிரபலமமா?- நடிகையே சொன்ன அதிரடி பதில், கேட்டீங்களா
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது, அப்படிபட்ட ஒரு நடிகை தான் மீனா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் இவர் தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு வித்யாசாகர் உயிரிழந்தார், அவரது இழப்பில் இருந்து மீனா வெளியே வர பிரபலங்கள் பலரும் உதவினார்கள். தற்போது நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

மறுமணம்
நடிகையின் கணவர் இறந்ததில் இருந்து நடிகை மீனாவின் மறுமணம் குறித்து நிறைய தகவல்கள் வந்துகொண்டே இருக்கிறது.
ஒரு சமயம் சினிமாவில் இல்லாத நடிகையின் நண்பர் என்றும் பிரபலத்தை தான் அவர் திருமணம் செய்கிறார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் நடிகை மீனா சமீபத்தில், சமூக வலைத்தளத்தில் உண்மைகளை சொல்லுங்கள், அதுதான் நல்லது. நாட்டில் என்னைப்போல் தனிமையில் வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பற்றி யோசியுங்கள். தற்போதைக்கு எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. எதிர்கால முடிவு பற்றி இப்போது எப்படி சொல்ல முடியும் என காட்டமாக பேசியுள்ளார்.

இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri