தனது அம்மா குறித்து எமோஷ்னலாக பேசிய நடிகை மீனாவின் மகள் நைனிகா- ஏன் தெரியுமா?
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் 90களில் முக்கிய நாயகியாக வலம் வந்த ஒரு பிரபலம்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள மீனா தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய், சரத்குமார், சத்யராஜ் என பலருடனும் நடித்துள்ளார்.
தற்போதும் சினிமாவில் ஆக்டீவாக இருக்கும் மீனா வாழ்க்கையில் கடந்த வருடம் ஜுன் மாதம் ஒரு சோகமான சம்பவம் நடந்தது, அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் காலமானார்.
மகளின் எமோஷ்னல் பேச்சு
கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமாத்துறையில் 40 ஆண்டுகளை கடந்த மீனாவிற்கு ஒரு சிறப்பான விழா நடத்தப்பட்டது.
அதில் அவரது மகள் நைனிகா பேசும்போது, ஒரு பெண்ணாக சினிமாவில் 40 ஆண்டுகள் இருப்பது சாதாரண விஷயம் அல்ல.
தனது அம்மா குழந்தை நட்சத்திரமாகவும் ஹீரோயினாகவும் சாதித்துள்ளார்.
பல செய்திகளில் தனது அம்மா குறித்து தவறான செய்திகள் வருகின்றன. தன்னுடைய அம்மா ஒரு ஹீரோயினாக இருக்கலாம், ஆனால் அவரும் ஒரு மனிதர் தான், அவருக்கும் ஃபீலிங்ஸ் உண்டு.
ஆகையால் அவரைப் பற்றி தவறாக பேச வேண்டாம் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார் நைனிகா.
இந்த வாரம் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?