கமலின் மெகா ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட நடிகை மீனா- எந்த படம் தெரியுமா?
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
1982ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "நெஞ்சங்கள்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.
ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, அஜித் என பல ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
சமீபத்தில் மீனாவின் கணவர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த படமா அது
மீனா பேட்டி ஒன்றில் தான் தவறவிட்ட சூப்பர் ஹிட் படத்தை பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர் " கமல் ஹாசன் நடித்து வெளியான ’தேவர் மகன்’ படத்தில் நடிகை ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. சில காரணங்களால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது" என்றார்.
அவதார் 2 படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கூறிய நடிகர் சிம்பு.. படம் எப்படி இருக்கு