கணவர் இறப்பிற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த நடிகை மீனா- அவரே வெளியிட்ட வீடியோ
நடிகை மீனா
நடிகை மீனா தமிழ் சினிமா ரசிகளால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். தமிழில் ரஜினி, கமல், அர்ஜுன், விஜயகாந்த், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.
தமிழ் மட்டும் இல்லாது மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவரைப போலவே இவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி நடித்துள்ளார்.
இடையில் நடிப்பை நிறுத்தி இப்போது நைனிகா படப்பிடிப்பில் கவனம் செலுத்துகிறார். இவ்வருடம் நடிகை மீனாவிற்கு ஒரு சோகமான வருடம் என்றே கூறலாம்.
காரணம் அவரது கணவர் நுரையீரல் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். நடிகை மீனா கணவர் உயிரிழப்பில் இருந்து வெளியே வர அவரது தோழிகள் தான் அதிகம் உதவினார்கள்.
படப்பிடிப்பு தள வீடியோ
நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது மீனா மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடும் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் நல்லது, வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பார்த்திபனை விவாகரத்து செய்த நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா?