மறுமணத்திற்கு தயாரானாரா நடிகை மேக்னா ராஜ்.. புகைப்படம் வெளியிட்டு அவர் போட்ட பதிவு வைரல்
மேக்னா ராஜ்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை மேக்னா ராஜ். '
இவர் கடந்த 2018ம் ஆண்டு சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமாகி 2 ஆண்டுகளில் இவரது காதல் கணவரும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சிரஞ்சீவி இறந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆக மேக்னா ராஜ் மறுமணத்திற்கு தயாராகிவிட்டதாக நிறைய செய்திகள் வலம் வர தொடங்கிவிட்டன.

போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரத்துடன் வந்த குக் வித் கோமாளி 6 புரொமோ.. இத்தனை சீரியல், பிக்பாஸ் பிரபலங்களா..
நடிகையின் பதிவு
மறுமண செய்திக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் ஒரு புகைப்படம் பதிவிட்டு மேக்னா ராஜ் பதிவு போட்டுள்ளார்.
அதில் அவரது கணவர் போட்டோவை போட்டு, எனக்கு நீயே வேண்டும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் கணவர் என்று பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்தால் அவரது வாழ்க்கையில் 2வது திருமணம் என்பது பேச்சுக்கே இடமில்லை என்பது இந்த பதிவு மூலம் தெளிவாக தெரிகிறது.