ஒரே ஒரு ஹிட் படம் தான், நயன்தாரா-சமந்தாவை விட சம்பளத்தை உயர்த்திய நடிகை மிருணாள் தாகூர்- எவ்வோ தெரியுமா?
மிருணாள் தாகூர்
துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க மிருணாள் தாகூர், ராஷ்மிகா என பலர் நடிக்க வெளியாகி செம ஹிட்டடித்த படம் தான் சீதா ராமம்.
இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியவர் நடிகை மிருணாள் தாகூர்.
முதன்முதலில் மராத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஹிந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தெலுங்கு சினிமா நடிகர் நானியின் 30வது படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அதிரடி சம்பளம்
மிகப்பெரிய ஹிட் கொடுத்த சீதா ராமம் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை விட 2 மடங்கு அதிகமாக நானியுடன் நடிக்கும் படத்திற்காக அவர் வாங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சீதா ராமம் படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வாங்கிய மிருணாள் தாகூர் தற்போது புதிய படத்திற்காக ரூ. 6 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.
நயன்தாரா, சமந்தா, ராஷ்மிகா என முன்னணி நாயகிகளே அதிக பட்சமாக ரூ. 5 கோடி வரை மட்டுமே சம்பளமாக பெரும் நிலையில் இவர் அதிக சம்பளம் வாங்கியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நடிகை த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் நின்றது ஏன்?- முதன்முறையாக கூறிய அவரது தாயார்