நடிகை த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் நின்றது ஏன்?- முதன்முறையாக கூறிய அவரது தாயார்
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமா கொண்டாடும் பிரபல நாயகிகளில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா. துணை நடிகையாக முதலில் தனது பயணத்தை ஆரம்பித்த அவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.
தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது அவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருக்கிறார்.
படத்தின் புரொமோஷனுக்காக இப்போது பிஸியாக பயணம் செய்து வருகிறார்.
நடிகையின் அம்மா
த்ரிஷாவின் அம்மா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது, வருணுடன் த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் முடிந்தது குறித்து நிறைய விஷயங்கள் எழுதுகிறார்கள், ஆனால் உண்மை என்பது எங்களுக்கு தான் தெரியும்.
திரிஷா சினிமாவில் நடிக்கிறார் என்று தெரிந்து தான் பெண் பார்க்க வந்தார்கள். பின் எல்லாம் தெரிந்து தானே நிச்சயம் செய்தார்கள். கல்யாணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என்று சொன்னார்கள், வருண் என்கரேஜ் செய்து கொண்டிருந்தார், அதுதான் உண்மை.
திரிஷா கல்யாணம் நின்று போன விஷயத்தில் பெரியவங்க பல பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய பேர் இன்வால்வாகி இருக்கிறார்கள்.
ஒத்து வராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டு வாழுறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. சில விஷயங்கள் சரிப்பட்டு வரவில்லை என்றால் பிரிந்து விடுவது தான் பெட்டர் என பேசியுள்ளார்.
திருமணம் நடக்காமல் கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை இலியானா?- திடீரென அவர் போட்ட பதிவு