ஏற்கனவே திருமணம் ஆனவரை நிச்சயதார்த்தம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா! யார் அவர்?
யாரடி நீ மோகினி, வள்ளி திருமணம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இருப்பவர் நக்ஷ்த்திரா. அவர் கடந்த வருடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நபரை பார்த்து காதலில் விழுந்து, ஒரே மாதத்தில் நிச்சயதார்த்தமும் செய்து முடித்திருக்கிறார்.
அந்த தகவலை அவரது தோழி நடிகை ஸ்ரீநிதி தான் வெளியிட்டு இருக்கிறார். நக்ஷத்திரா அந்த நபரை திருமணம் செய்ய கூடாது என தடுக்க முயற்சித்து இருக்கிறார் ஸ்ரீநிதி, அதற்காக மாப்பிள்ளை வீட்டார் ஸ்ரீநிதியை தாக்கியும் இருக்கின்றனர்.
அது பற்றி அதிர்ச்சி தரும் பல விஷயங்களை ஸ்ரீநிதி தெரிவித்து இருக்கிறார். நக்ஷத்திரா காதலித்து நிச்சயதார்த்தம் செய்திருக்கும் நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது முதல் மனைவி திருமணம் முடிந்த பத்து நாளிலேயே விட்டு சென்றுவிட்டார்.
அவர்கள் கொடுத்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தான் அந்த நபருக்கு இரண்டாம் தாரமாக நக்ஷ்த்திரா போகிறார்.