வாரிசு படம்
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பூ, ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
2023ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, பின்னணி பணிகள் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை
இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நந்தினி ராய் எனும் நடிகை நடித்துள்ளார்.
பாலிவுட் மூலம் நடிகையாக அறிமுகமான நந்தினி ராய் அதன்பின் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also See This : OMG ? இந்த 1 Shirt-ஓட Rate-ல 100+ Shirt வாங்கலாம் sir...