வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மேலும் இப்படம் இப்படம் 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனிடையே அதிர்ச்சியளிக்கும் வகையில் வாரிசு திரைப்படத்தில் இருந்து முக்கிய பாடல் காட்சி மற்றும் புகைப்படங்கள் லீக் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்கள் முன்பு அப்படத்தின் 30 நொடி பாடலையே லீக் செய்து இருந்தனர்.
ஒவர்சீஸ் உரிமம்
இந்நிலையில் வாரிசு திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், அதன்படி வாரிசு படத்தின் வெளிநாட்டு திரையரங்க உரிமையை பெரிய தொகைக்கு Phars Films வாங்கியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
மேலும் விஜய்யின் திரைப்படங்களில் இப்படம் தான் வெளிநாட்டில் பெரியளவில் ரிலீஸ் ஆக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இரண்டாவது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேகனா ராஜ்