பாவம் கணேசன் தொடரில் நடித்து கொண்டு இருக்கும் போதே, பிக்பாஸ் வீட்டில் நுழைந்த கதாநாயகி !
நேஹா ராமகிருஷ்ணா
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் முக்கிய தொடர் பாவம் கணேசன் இத்தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியிருக்கிறது.
நேஹா ராமகிருஷ்ணா இந்த தொடரின் கதாநாயகியாக நடித்து வருகிறார், கலக்கப்போவது யாரு நவீன் இதில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
பிக்பாஸ் எண்ட்ரி
இதனிடையே இத்தொரின் கதாநாயகி நேஹா சன் டிவி-ல் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரின் மூலம் அறிமுகமானார். அவர் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் கன்னடா சீசன் 9-ல் நேஹா போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
திருமணமாகி கணவருடன் பெங்களூரில் வசித்து வரும் நேஹா, சீரியல்களில் சந்தமான கதாபாத்திரங்களிலே நடித்து வந்துள்ளார். அப்படியான அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து எப்படி இருக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பொன்னியின் செல்வன் ஒரு தெலுங்கு திரைப்படம்! - நடிகை சுஹாசினி