வறுமை, எய்ட்ஸ் நோய், பரிதாபமாக உயிரிழந்த ரஜினி, கமல் பட நடிகை- எலும்பும், தோலுமாக ஆன பிரபலம்
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நிஷா நூர்.
தமிழில் மங்கள நாயகி என்ற படத்தின் மூலம் தான் நாயகியாக அறிமுகமானார்.
அதன்பின் கமல்ஹாசனுடன் டிக் டிக் டிக், இனிமை இதோ இதோ, விசுவின் அவள் சுமங்கலித்தான், பாலச்சந்திரனின் கல்யாண அகதிகள், ரஜினியுடன் ஸ்ரீராகவேந்திரா என படு ஹிட்டான படங்களில் நடித்து வந்தார்.
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகையின் கடைசி காலம்
டாப் நாயகியாக வலம் வந்துகொண்டிருந்த நிஷா ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே காணவில்லை, காரணம் அவருக்கு ஏற்பட்ட நோய்.
கடந்த 2007ம் ஆண்டு இவர் தர்காவிற்கு வெளியே உடல் எலும்புகள் மெலிந்து அடையாளம் தெரியாத அளவில் மிகவும் மோசமான நிலையில் இருந்திருக்கிறார். பின்பு தான் அவர் நடிகை நிஷா நூர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு யாரும் கவனிக்க ஆள் இல்லாமல் கடைசி காலத்தில் துன்பத்தை அனுபவித்து ஏப்ரல் 23, 2007ம் ஆண்டு உயிரிழந்திருக்கிறார்.
நடிகர் விஜய்யின் லியோ படத்தில் இந்த கிரிக்கெட் வீரரா?- அவரே போட்ட அப்டேட், ரசிகர்கள் ஹேப்பி