தவறான தொழில் செய்ய வைத்த பிரபலம்!. AIDS நோயால் அனாதையாக இறந்த கமல், ரஜினி பட நடிகை
1980 -ம் ஆண்டு வெளியான மங்கள நாயகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நிஷா நூர்.
இப்படத்தை தொடர்ந்து இளமை கோலம், எனக்காக காத்திரு, டிக் டிக் டிக், அவள் சுமங்கலி தான், ஸ்ரீ ராகவேந்திரா, கல்யாண அகதிகள் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.
நிஷா நூர் தமிழ் படங்கள் மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் அவள் ஒரு வசந்தம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வந்த ரஜினி, கமல் போன்ற நட்சத்திரங்கள் படங்களில் நடித்த இவர் பட வாய்ப்புகள் குறைந்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அப்போது தயாரிப்பாளர் ஒருவர் நிஷாவை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து நிஷா நூர் தர்கா அருகில் பரிதாபகமாக படுத்து கிடந்துள்ளார்.
அப்போது முஸ்லிம் முன்னேற்ற கழக ஆட்கள் அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 2007ல் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணமா.. வெளிவந்த புதிய தகவல்