அஜித் ஒயிட் சாக்லேட் பாய், அப்படித்தான் கூப்பிடுவேன்.. பிரபல நடிகை சொன்ன அந்த விஷயம்
அஜித்
நடிகர் அஜித் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது, அஜித் தீவிரமாக ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த விஷயம்
இந்நிலையில், அஜித் குறித்து நடிகை தேவி பிரியா பேசியிருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.
அதில், " அஜித் எப்போதுமே எனக்கு ஒரு ஒயிட் சாக்லேட் பாய். அஜித்தை நான் எப்போதும் அப்படித்தான் கூப்பிடுவேன். பனியில் பூத்த பூ போன்று இருப்பார். அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன். அதேபோல் ரொம்பவே தன்மையாக நடந்துகொள்பவர். அவருடன் நடித்ததில் சந்தோஷம்" என்று தெரிவித்துள்ளார்.