மாலத்தீவில் சமீபத்தில் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை பூஜா ஹெட்ச் சொத்து மதிப்பு- இதோ முழு தகவல்
பூஜா ஹெட்ச்
இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெட்ச். தெலுங்கில் அல்லு அர்ஜுன் உடன் நடித்த துவடு ஜெகநாதம் என்ற திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
பின் பாலிவுட்டில் ரித்திக் ரோஷனுடன் மொகஞ்சதாரோ படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கலக்க தொடங்கினார்.
இப்படி எல்லா மொழிகளில் மாற்றி மாற்றி நடித்தாலும் சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் எதுவும் அவ்வளவாக ஹிட் அடிக்கவில்லை.
சொத்து மதிப்பு
கடந்த 2022ம் ஆண்டு ரூ. 50 கோடி சொத்துக்கு சொந்தக்காரராக இருந்த பூஜா ஹேக்டேவின் இந்த வருட மதிப்பு ரூ. 66 கோடி வரை என கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு சம்பளமாக சுமார் 4 கோடி ரூபாயை பூஜா ஹெக்டே வாங்குகிறாராம்.
விளம்பரங்களிலும் நடித்துவரும் பூஜா ஹெக்டேவிற்கு ஆந்திரா மற்றும் மும்பையில் வீடுகள் உள்ளதாம்.