திருமணம் செய்துகொள்ள வயது மட்டும் இருந்தால் போதாது, அது வேண்டும்.. நடிகை பிரகதி வெளிப்படை பேச்சு
நடிகை பிரகதி
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரகதி. இனிமே இப்படித்தான், DJ Tillu, பகீரா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோக்களின் அம்மாவாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை பிரகதி சமீபத்தில் திருமணம் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
நடிகை வெளிப்படை பேச்சு
திருமணம் செய்துகொள்ள வயது ஒரு பொருட்டல்ல. வயது மட்டும் இருந்தால் போதாது, திருமணம் செய்து கொள்ள நிறைய முதிர்ச்சி வேண்டும். குறிப்பாக ஒருவருக்கொருவர் மீது நம்பிக்கை மற்றும் புரிதல் இருக்க வேண்டும். இந்த மூன்றும் திருமண விஷயத்தில் மிகவும் முக்கியமானது என்று நடிகை பிரகதி கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், மரியாதையும், நம்பிக்கையும் இல்லாத இடத்தில் எந்த உறவும் நிலைக்காது. உறவு நீடிக்க ஒருவருக்கொருவர் மரியாதையை கொடுப்பது முக்கியம். ஒருவரின் எண்ணங்களை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும். இருவரிடமும் அந்த குணம் இருப்பது மிகவும் முக்கியம் என பிரகதி கூறியிருக்கிறார்.