இவர் தான் பகத் பாசிலா.. பிரபல நடிகையின் வைரல் பதிவு
புஷ்பா 2
கடந்த வாரம் வெளிவந்த புஷ்பா 2 படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கமர்ஷியல் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் பகத் பாசில் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில், தெலுங்கு நடிகை ருஹானி சர்மா புஷ்பா படத்தில் நடித்த பகத் பாசில் குறித்து ஒரு உணர்ச்சிபூர்வ பதிவை வெளியிட்டுள்ளார்.
வைரல் பதிவு
அதில், " நான் பகத் பாசிலின் தீவிரமான ரசிகை. புஷ்பா படத்தில் அவரது வருகைக்காக மிகவும் ஆர்வமாக காத்திருந்தேன். ஆனால், அவர் படத்தில் என்ட்ரி கொடுக்கும்போது எனக்கு அவரை அடையாளமே தெரியவில்லை.
பின்னால் அமர்ந்து இருந்த என் சகோதரரிடம் இவர் தான் பகத் பாசிலா என்று கேட்டு உறுதிப்படுத்தி கொண்டேன். அது தான் பகத் பாசில், அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார். அவரை திரையரங்கில் பார்ப்பது எப்போதுமே ஒரு விருந்துதான்" என்று பதிவிட்டுள்ளார்.