நெருக்கமான காட்சிகளில் நடிக்க மறுப்பதற்கு காரணம் என்ன?- ஓபனாக கூறிய நடிகை பிரியாமணி
நடிகை பிரியாமணி
தமிழ் சினிமாவின் முக்கியமான நாயகிகள் லிஸ்ட் எடுத்தால் அதில் இடம்பெறும் நாயகி தான் பிரியாமணி. தமிழில் பெரிய ரீச் இல்லை என்றாலும் மற்ற மொழிகளில் டாப் நாயகியாக தான் இருக்கிறார்.
பருத்திவீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது எல்லாம் வாங்கி அசத்தினார். கடைசியாக தமிழில் சாருலதா என்ற படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்தார், ஆனால் படம் சரியான ரீச் பெறவில்லை.
அதன்பின் 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரியாமணி, நடன நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.
நெருக்கமான காட்சி
அண்மையில் ஒரு பேட்டியில் பிரியாமணி பேசும்போது, நான் படுக்கை அறை காட்சியிலோ, நடிகருடன் நெருக்கமாக இருக்கும் காட்சியிலோ நடிக்க மாட்டேன்.
காரணம் என் படத்தை குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பார்ப்பார்கள், படம் பார்க்கும் போது அவர்களின் முகம் சுளிக்கக்கூடாது. அதுமட்டுமில்லாமல் அப்படி நடித்தால் என் கணவருக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் என கூறியுள்ளார்.
விஜய்யின் லியோ படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் வெளியிட்ட பிக்பாஸ் புகழ் இலங்கை பெண் ஜனனி- குவியும் லைக்ஸ்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
