நடிகை ரம்யா கிருஷ்ணனின் க்ரஷ் இந்த நடிகர் தானாம்.. அவரே கூறியுள்ளார்
ரம்யா கிருஷ்ணன்
இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த படையப்பா படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்திருந்தார்.

இதன்பின் பல படங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன், ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் ராஜாமாத்த எனும் பலமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு இந்தியளவில் பிரபலத்தை பெற்று தந்தது.
ரம்யா கிருஷ்ணனின் க்ரஷ்
இந்நிலையில், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு தனது பிரம்மாஸ்திரா படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் நாகார்ஜுனா கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் நாகாஅர்ஜுனாவிடம் உங்களுடைய க்ரஷ் யாரென்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார். நாகார்ஜுனா இதற்க்கு பதிலளிப்பதற்குள்,நடிகை ரம்யா கிருஷ்ணன் இதற்க்கு பதில் கூறிவிட்டார். அவர் கூறியதில் " யாரை பார்த்து என்ன கேட்குறீர்கள். நாகார்ஜுனாவிற்கு க்ரஷ் ஒண்ணா ரெண்டா. அவருடைய க்ரஷ் எல்லாம் யாரென்று எனக்கு தெரியாது. ஆனால், என்னயுடைய க்ரஷ் நாகாஅர்ஜுனா தான் " என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu