அட நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக்
ரம்யா கிருஷ்ணன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில் படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
பரதநாட்டியம் குச்சுப்புடி நடன பயிற்சி எடுத்து பல மேடைகளில் நிகழ்ச்சி நடத்திய இவர் தனது 15 வயதில் சினிமாவில் நுழைந்தார். 1983ம் ஆண்டு முதன்முதலாக வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் நடித்தார்.
30 ஆண்டுகளாக திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரம்யா கிருஷ்ணன் சின்னத் திரையிலும் கால் பதித்தார்.
தொகுப்பாளராகவும், சின்னத்திரை நடிகையாக கலசம், தங்கம், வம்சம் போன்ற தொடர்களில் நடித்திருந்தார்.
லேட்டஸ்ட் க்ளிக்
கிரிக்கெட் ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து பிரபலங்கள் பலரை ஸ்டேடியத்தில் காண முடிகிறது. அந்த வகையில் இப்போது பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் மேட்ச் பார்க்க வந்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக ரம்யா கிருஷ்ணன் மகன் நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கோபி சொன்ன ஒரு வார்த்தை கடும் கோபத்தில் அடிக்க சென்ற எழில் மற்றும் செழியன்- பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பு

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
