திருமணம் செய்ய விருப்பம் தான், ஆனால்?- ரசிகர் கேட்ட கேள்விக்கு சீரியல் நடிகை ரேஷ்மா பதில்

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகை ரேஷ்மா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற தொடர் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமாகி இருப்பவர் ரேஷ்மா.
நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரியான இவர் இப்போது ஜீ தமிழில் சீதா ராமம் என்ற தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
சீரியல்களில் நடிப்பதை தாண்டி ரேஷ்மா நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கடை திறப்பு விழாக்களில் அதிகம் கலந்துகொள்ளும் இவர் அங்கு வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
இன்ஸ்டாவில் போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்டு எப்போது ஆக்டீவாக இருப்பார்.
திருமணம் பற்றி பதில்
சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது ஒரு ரசிகர் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த ரேஷ்மா எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் தான், ஆனால் எனது அம்மா அனுமதிக்க மாட்டார் என பதில் அளித்துள்ளார்.
தோல்வி நிலையில் இருக்கும் பொன்னியின் செல்வன் 2.. அதுவும் இந்த முக்கிய இடத்தில்