நடிகை ரேவதியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா.. சினிமாவிற்காக பெயரை மாற்றிய இயக்குனர்
நடிகை ரேவதி
பாரதி ராஜா இயக்கத்தில் வெளிவந்த மண் வாசனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேவதி.
இதன்பின் கை கொடுக்கும் கை, புதுமை பெண், வைதேகி காத்திருந்தாள், மௌனராகம், கிழக்கு வாசல், தேவர் மகன் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையானார்.
மேலும் தற்போது சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
நடிகையாக மட்டுமின்றி இயக்குனராகவும் கடந்த 2002ஆம் ஆண்டு அறிமுகமானார். ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெயரை மாற்றிய இயக்குனர்
இந்நிலையில், ரேவதி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை ரேவதியின் உண்மையான பெயர் ஆஷா தானாம். இயக்குனர் பாரதிராஜா தான் சினிமாவிற்காக ஆஷா எனும் பெயரை ரேவதி என மாறினார் என்கின்றனர்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
