என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு, வருத்தத்தில் நடிகை ரேவதி
நடிகை ரேவதி
நடிகை ரேவதி, 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்தவர் ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களை இயக்கியுள்ளார்.
1983ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் முதல் படத்திலேயே யதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் மௌன ராகம், புன்னகை மன்னன், கைதேகி காத்திருந்தாள், கிழக்கு வாசல், தேவர் மகன், அஞ்சலி, மகளிர் மட்டும் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
பல விருதுகளை தன்வசப்படுத்திய ரேவதி 1988ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2002ம் ஆண்டு பிரிந்து வாழ்ந்து வந்தவர்கள் 2013ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
நடிகை பேட்டி
நடிகை ரேவதி சமீபத்தில் ஒரு பேட்டியில், சினிமாவில் எந்த வருத்தமும் இல்லை என்றாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெரிய வருத்தம் இருப்பதாக கூறியுள்ளார்.
சரியான வயதில் திருமணம் செய்துகொள்ளாதது தான் பெரிய வருத்தம், நான் திருமணம் செய்த வயதில் செய்திருக்கக் கூடாது. இன்னும் 4 வருடங்கள் கழித்துச் செய்திருக்க வேண்டும் என பேசியுள்ளார்.