ராஜா ராணி 2 சீரியல் நடிகை ரியா இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா?- அவரே போட்ட பதிவு
பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது ராஜா ராணி 2 தொடர். இதில் சித்து மற்றும் ஆல்யா முதலில் கதையின் முக்கிய நடிகர்களாக இருந்தனர்.
இடையில் ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக அவர் பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பு வரை நடித்தார், அவருக்கு பதில் ரியா என்பவர் நடித்து வருகிறார்.
ரியா கொடுத்த அப்டேட்
ரியாவிற்கு நடிப்பு சம்பந்தப்பட்டு வந்த முதல் சீரியல், அதற்கு முன் அவர் மாடலிங் துறையில் தான் கலக்கி வந்துள்ளார். அவரது சமூக வலைதளங்களில் மாடனாக நிறைய போட்டோ ஷுட்கள் எல்லாம் எடுத்து அசத்தியுள்ளார்.
அண்மையில் இவர் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ஒரு ரசிகர் இவ்வளவு அழகாக உள்ளீர்களே உங்களை எப்படி கரெக்ட் செய்வது என கேட்க, அதற்கு அவர், பிரதர் நான் ஏற்கெனவே ஒருவரை காலிக்கிறேன் என பதிவு போட்டுள்ளார்.
ரியா காதலர்
இப்படி இவர் இன்ஸ்டாவில் கூற இன்னொரு பக்கம் ரியாவின் காதலர் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் என கூறப்படுகிறது. ஆனால் எதுவும் சரியாக உறுதியாகவில்லை.
ரசிகர்கள் மட்டும் இவர்கள் இருவரையும் வைத்து கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.