இளம் வயதிலேயே பெரிய விருது வாங்கிய நடிகை ரோஜா மகள்- அவருக்கு இப்படியொரு திறமையா?
தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா.
முதல் படம் பெரிய ரீச் கொடுக்க தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, ஊட்டி போன்ற படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார்.
படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் செல்வமணியை காதலித்து 2002ம் ஆண்டு திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள், இருவரின் புகைப்படங்களையும் ரோஜா சமூக வலைதளங்களில் பதிவு செய்த வண்ணம் இருப்பார்.
ரோஜா மகள் வாங்கிய விருது
ரோஜாவின் மகன் அன்ஷு மாலிகா இளம் வயதிலேயே தனது திறமையை வெளிப்படுத்தி சாதனை செய்துள்ளார். அவர் வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டர் ஆக தன்னை மெருகேற்றி வருகிறார்.
இவர் எழுதிய “தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகம் ஜி டவுன் என்ற இதழில் வெளியானது. தற்போது தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது ரோஜாவின் மகளுக்கு கிடைத்துள்ளது.
விருது வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ரோஜா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
தெறி வசூல் வேட்டை நடத்தும் அருண் விஜய்யின் யானை திரைப்படம்- மொத்தமாக இவ்வளவா?