சினிமாவை தாண்டி நடிகை சமந்தா இத்தனை தொழில்களை செய்து வருகிறாரா?

By Yathrika Apr 29, 2023 06:30 AM GMT
Report

நடிகை சமந்தா

பல்லாவரத்து பொண்ணு என தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக கொண்டாடப்படும் ஒரு நடிகை. நேற்று இவருக்கு பிறந்தநாள், பிரபலங்கள் ரசிகர்கள் என அவருக்கு வாழ்த்து வண்ணம் இருந்தது.

சமந்தாவும் தனக்கு வாழ்த்து கூறியவர்களின் பதிவை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்து வந்தார்.

கடைசியாக சமந்தா நடிப்பில் சகுந்தலம் படம் வெளியானது, ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை. அடுத்ததாக ரசிகர்கள் சமந்தா நடித்துள்ள குஷி படத்திற்காக வெயிட்டிங்.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது.

சினிமாவை தாண்டி நடிகை சமந்தா இத்தனை தொழில்களை செய்து வருகிறாரா? | Actress Samantha Own Business Details

நடிகையின் தொழில்கள்

சினிமாவிலேயே கோடி கணக்கில் சம்பளம் பெறும் சமந்தா சொந்தமாக சில தொழில்களையும் செய்து வருகிறார். சொத்து மட்டுமே ரூ. 101 கோடி வைத்துள்ள நடிகை சமந்தா ரியல் எஸ்டேட்டில் நிறைய முதலீடு செய்துள்ளார்.

ஜதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் இவருக்கும் வீடு உள்ளது. சூப்பர் ஃபுட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நடிகை சமந்தாவிற்கு ஆண்டுதோறும் 2 மில்லியன் டாலர் வருமானம் வருகிறதாம்.

Saaki எனும் பேனுன் பிராண்டையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.

சஸ்டெயின் கார்ட் எனும் இ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் மிவி பிராண்ட் ஆகியவற்றின் விளம்பர தூதராக சமந்தா இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்ய ஒரு பதிவுக்கு ரூ. 20 லட்சம் வரை வாங்குகிறாராம், அதோடு Ekam Early Learning Center என்கிற குழந்தைகளுக்கான பிளே ஸ்கூலையும் நடத்தி வருகிறார்.

சினிமாவை தாண்டி நடிகை சமந்தா இத்தனை தொழில்களை செய்து வருகிறாரா? | Actress Samantha Own Business Details

நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக வாங்கிய காரை பார்த்துள்ளீர்களா?- வைரலாகும் புகைப்படம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US