எனக்கும் ரஜினிக்கும் திருமணம் முடிந்ததா?.. பிரபல நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்
ரஜினிகாந்த்
பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையனாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரஜினி குறித்து அவருடன் முன்பு இணைந்து நடித்த நடிகை கவிதா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
திருமணம் முடிந்ததா?
அதில், " ஒருமுறை மோகன்பாபுவுடன் நான் நடித்துக்கொண்டிருந்தேன், அப்போது எனது மேக்கப் மேன் பத்திரிகை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தார்.
அந்த பத்திரிகையில் நானும், ரஜினியும் திருமணம் செய்துகொண்டதாக எழுதியிருந்தார்கள். எனக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை.
ஆனால், என்னுடன் நடித்து கொண்டிருந்த மோகன் பாபு மேக்கப் மேனை அழைத்து அந்த பத்திரிகையில் இருப்பதை வாசிக்க சொன்னார்.
வாசித்த பின், அதை கேட்டு உச்சக்கட்ட கடுப்பில் படப்பிடிப்பை பேக்கப் செய்து இயக்குனரை அழைத்து கொண்டு என்னையும் ரஜினியையும் பற்றி தவறாக எழுதியிருந்த பத்திரிகையின் அலுவலகத்துக்கு சென்று கத்திவிட்டார்.
நான் ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ளேன். அதனால் தான் இவ்வாறு செய்து விட்டார்கள் என சிலர் கூறினர்" என்று கூறியுள்ளார்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
