எப்போதும் பிட்டாக இருக்க நடிகை ஷில்பா ஷெட்டி எடுத்துக் கொள்ளும் டயட்- என்ன செய்கிறார் தெரியுமா?
ஷில்பா ஷெட்டி
பாலிவுட் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. மிஸ்டர் ரோமியோ படத்தில் ஆடிய டான்ஸை இன்றும் ரசிகர்கள் மறக்கவில்லை.
குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு சூப்பர் ஹிட் பாடலுக்கும் நடனம் ஆடி அசத்தியிருப்பார். 48 வயதாகும் இவர் இப்போதும் பலருக்கு ஃபிட்னஸ் ரோல் மாடலாக இருக்கிறார்.

வெயிட் லாஸ் டயட்
பிரசவத்தின் போது ஷில்பா ஷெட்டி 32 கிலோ வரை எடை கூடினாராம்.
வெயிட்டை குறைக்க ஷில்பா காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் கற்றாழை ஜுஸ் எடுத்து கொண்டாராம். பின்பு 2 டம்ளர் வெந்நீர் குடிப்பது, சரியாக 2 மணி நேரம் இடைவெளிக்கு பிறகு பப்பாளி, கிர்ணி, கொய்யா பழங்களை சாப்பிடுவாராம்.
ஒருவேளை பிரவுன் அரிசி, மாலை நேரத்தில் அவக்காடோ, வால்நட் போன்ற எல்தி ஸ்நாக்ஸ், இரவு 1 கப் சூப்.

இதற்கு இடையில் பழச்சாறு அல்லது ஸ்மூத்தி இதுதான் ஷில்பா ஷெட்டி பின்பற்றிய டயட். காலை மற்றும் மாலை 2 வேளையும் யோகா பயிற்சி, வெயிட் லாஸ் செய்ய யோகா தான் சிறந்ததாம்.
இத்துடன் உடலுக்கு உழைப்பு தர நீச்சல் பயிற்சியும் எடுத்துக் கொண்டாராம்.

TRPயில் டாப்பில் வந்த சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- சோகத்தில் ரசிகர்கள்