பல வித்தியாசங்கள், அப்பா கமல் குறித்து ரஜினி சொன்ன விஷயம்.. ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்
ஸ்ருதிஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன். பாடகி, இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசன் இசை துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாக கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
ஓபன் டாக்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து ஸ்ருதிஹாசன் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " முதன் முறையாக ரஜினிகாந்த் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்பாவுக்கும் அவருக்கும் இடையே பல வித்தியாசங்கள் இருக்கின்றன.
இவரை பற்றி தெரிந்துகொள்ளும் பாக்கியம் கூலி படத்தால் எனக்கு கிடைத்தது. அவரிடம் பல நல்ல விஷயங்கள் உள்ளது. அவ்வளவு எளிமையாக இருப்பார்.
அதேசமயம் பயங்கர ஷார்ப்பாக இருப்பார். முக்கியமாக அனைவரிடமுமே கனிவாகத்தான் நடந்துகொள்வார். என்னுடைய அப்பா பற்றி பல விஷயங்களை கூலி செட்டில் அவர் பேசியிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri
