38வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசனின் முழு சொத்து இத்தனை கோடியா?
ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானார்.
அதன்பின் பள்ளி, கல்லூரி, இசை என தொடர்ந்து தனது படிப்புகளை கவனித்து வந்தார். பின் பாடகியாக கலக்கிவந்தவர் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் வானம் எல்லை என்பது இங்கில்லை பாடலை பாடியிருந்தார்.
அப்பாடலை தொடர்ந்து ஸ்பெஷலாக தமிழை போற்றும் வண்ணம் உருவான செம்மொழி பாடலில் ஹை பிட்சில் பாடல் பாடி அனைவரின் கவனத்தை பெற்றார்.
2011ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கிவந்தவர் கடைசியாக பெரிய பட்ஜெட்டில் உருவான சலார் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
சொத்து மதிப்பு
நடிகை ஸ்ருதிஹாசன் தனது 21வது வயதில் இருந்தே தனது செலவுகளை பார்த்து வருவதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
நடிப்பு, விளம்பரம், இசை விழா, படங்களில் பாடல்கள் பாடுவது என பல திறமைகளை வெளிக்காட்டி அசத்திவரும் ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு ரூ. 80 முதல் ரூ. 90 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ஸ்ருதிஹாசன் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்தியர்கள் குறித்து விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர்: மன்னிப்புக் கோர பிரதமர் வலியுறுத்தல் News Lankasri

ஐபோன் 17 அறிமுகத்திற்கு முன்பு.., iPhone 16 போனின் விலை Flipkart மற்றும் Amazon-ல் குறைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
