நடிகை சிம்ரனை காதலித்த பிரபல நடிகரின் அண்ணன்.. கடுப்பாகி விஜயகாந்த் செய்த விஷயம்
நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சிம்ரன். இவர் அஜித், விஜய், கமல், சூர்யா, மாதவன், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த ராக்கெட்ரி படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். நடிகை சிம்ரன் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
பிரபல நடிகருடன் காதல்
இந்நிலையில், நடிகை சிம்ரன் பிரபல நடிகர் பிரபு தேவாவின் அண்ணனும், நடிகரும், நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் மாஸ்டரை சில ஆண்டுகள் காதலித்துள்ளார்.
இவர்கள் இருவரும் காதலித்த வந்த காலகட்டத்தில், சிம்ரன் நடித்த படத்திற்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் ராஜு சுந்தரம்.
ஹீரோ விஜயகாந்த் மற்றும் சிம்ரன் டூயட் பாடல் படமாக்கப்பட்டு வரும் பொழுது, விஜயகாந்தை ஒரு இடத்தில் ஆட வைத்தும், சிம்ரனை வேறொரு இடத்தில் ஆட வைத்தும் பாடலை எடுத்துக்கொண்டு இருந்தாராம் ராஜு சுந்தரம்.
கடுப்பான விஜயகாந்த்
இதை கவனித்த விஜயகாந்த் ராஜு சுந்தரத்தை அழைத்து, இப்படி பாடலை எடுத்தால் என் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள், இருவரையும் ஒன்றாக ஆட வைத்த பாடலை எடுங்கள் என்று கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டாராம் விஜயகாந்த். இதன்பின் இருவரையும் ஒன்றாக ஆட வைத்து பாடலை எடுத்துள்ளார் ராஜு சுந்தரம்.

இந்த 5 நாடுகள் கவனம்... விளாடிமிர் புடின் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்த ஜெலென்ஸ்கி News Lankasri

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri
