வடிவேலுவுக்கு ஜோடியாகும் திருமணமாகாத 50 வயது நடிகை.. யார் தெரியுமா
வடிவேலு
திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக படங்கள் நடிக்காமல் இருந்தவர் வடிவேலு. இதன்பின் கடந்த ஆண்டு வெளிவந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வடிவேலுவுக்கு ரீ எண்ட்ரியாக அமைந்தது.
இதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதன்பின் மீண்டும் அதே கூட்டணியில் வடிவேலு நடிக்கவுள்ளார். ஆம், வடிவேலு - பகத் பாசில் மீண்டும் இணைந்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது.
ஜோடியாகும் பிரபல நடிகை
இந்நிலையில், இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிகை சித்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகை சித்தாரா தான் இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை சித்தாரா, 50 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தாய், தந்தையின் மீது அதிக பாசம் கொண்டு இருந்ததால் தான், திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவை எடுத்ததாக நடிகை சித்தாராவே கூறியுள்ளார்.
You May Like This Video

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
