விஜய் டிவி சிவாங்கியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சூப்பர் சிங்கர் ஷோவில் பாடகியாக ரசிகர்களை கவர்ந்து அதன் பிறகு விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்று புகழின் உச்சிக்கே சென்றவர் சிவாங்கி கிருஷ்ணகுமார்.
காமெடியானாக இருந்து அதன் பின் குக் வித் கோமாளியின் போட்டியாளாராகவும் கடந்த வருடம் பங்கேற்றார் சிவாங்கி.
குடும்ப பின்னணி
சிவாங்கியின் பெற்றோர் இருவருமே இசை கலைஞர்கள் தான். அதுவும் கலைமாமணி விருது வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாங்கியின் அம்மா தான் சந்திரமுகி படத்தில் அரும் ’ரா ரா’ பாடலை பாடியவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சிவாங்கி இளம் வயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று தற்போது பிரபல பாடகியாக வலம் வருகிறார்.
படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பாடுவது மட்டுமின்றி அவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் இசை கச்சேரிகளிலும் பாடுகிறார் சிவாங்கி.
சொத்து மதிப்பு
சிவாங்கி கிருஷ்ணகுமார் பாடகியாக, நடிகையாக சம்பாதிப்பது மட்டுமின்றி இசை கச்சேரிகள் மற்றும் youtube சேனல் மூலமாகவும் அதிகம் சம்பாதிக்கிறார்.
அவரது யூடியூப் சேனலுக்கு 2.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் ஒரு வீடியோ வெளியிட்டால் அது பல லட்சம் பார்வைகளை பெறுகிறது. அதன் மூலமாகவும் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.
இதனால் சிவாங்கியின் Net Worth சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
You May Like This Video

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu

நான் பிரபுதேவாவின் ரசிகை; அதுக்காக இதை ஏற்க முடியாது - நடிகை சிருஷ்டி டாங்கே பகீர் புகார் IBC Tamilnadu
