என்னை இந்த விஷயத்திற்காக நிராகரித்தார்கள்- வருத்தமாக கூறிய சோபிதா துலிபாலா
சோபிதா துலிபாலா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் நடிகை சோபிதா துலிபாலா.
அண்மையில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் வரவேற்பு பெற்றார். பாலிவுட்டில் வெப் தொடர்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதுதவிர கொஞ்சம் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார்.
நடிகையின் பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை சோபிதா பேசும்போது, படங்களில் நடிக்க வருவதற்கு முன் நான் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு தேடினேன்.
அப்போது நான் வெள்ளையாக இல்லை, அழகாக இல்லை என்று எனக்கு முன்பே கூறினார்கள், அதற்காக நான் சோர்வடையவில்லை.
எனது முழு திறமையை சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் காட்டி வந்தேன், அந்த சிறிய கதாபாத்திரங்கள் தான் நிறைய கற்றுக் கொடுத்தன என கூறியுள்ளார்.
மிக விலையுயர்ந்த Jaguar Car வாங்கிய நடிகை ஷாலு ஷம்மு- இத்தனை லட்சமா?