குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்தது எப்படி?- சோனம் கபூர் கொடுத்த டிப்ஸ்
சோனம் கபூர்
பாலிவுட் சினிமாவில் இப்போது கலக்கி வருவதே பிரபலங்களின் வாரிசுகள் தான். அப்படி பிரபல நடிகர் அனில் கபூரின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் தான் சோனம் கபூர்.
2007ம் ஆண்டு Saawariya என்ற படத்தின் மூலம் தொடங்கிய இவரது பயணம் Delhi 6, I Hate Luv Storys என தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நிறைய வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நாயகி அந்தஸ்திற்கு வந்த இவர் 2018ம் ஆண்டு ஆனந்த் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
உடல் எடை குறைப்பு
கர்ப்பமாக இருக்கும் போது அதிகரித்த இவரது உடல் எடை குழந்தை பிறந்த பிறகு அதிகமாகியுள்ளது. எனவே சோனம் கபூர் கடுமையான டயட் இருந்து உடல் எடையை குறைத்துள்ளார்.
இவர் தனது உடல் எடையை குறைக்க யோகா உதவியதாம், தினமும் 40 நிமிடம் யோகா செய்வாராம்.

குமரன் பிக்பாஸ் செல்லவில்லை, உள்ளே செல்வது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இந்த பிரபலமமா?- யார் பாருங்க?
அதிகம் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வாராம். அதுபோல் தினமும் 3 வேளையும் பழங்கள் மற்றும் பழசாறுகள் சாப்பிடுவாராம்.
அரிசி, பால், உப்பு, சர்க்கரை போன்ற வெள்ளை உணவு பொருட்களை சாப்பிடுவதை நிறுத்திவிட்டாராம். இரவு நேரத்தில் சூப் குடிப்பாராம், இது பசியை கட்டுப்படுத்துவதுமின்றி காலை வரை நல்ல ஆற்றலுடன் இருக்கி உதவுகிறது என்கிறார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
