குட்டி ஸ்ரீலீலாவின் பரதநாட்டிய வீடியோ.. 9 வயதில் எப்படி நடனமாடியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ

By Karthick Raja Sep 06, 2026 03:44 AM GMT
Report

நடிகை ஸ்ரீலீலா தனது 9 வயதில் ஆடிய பரதநாட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: இம்மார்ட்டல் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: இம்மார்ட்டல் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

ஸ்ரீலீலா

தனது நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ரீலீலா. இதில், நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 'புஷ்பா 2' திரைப்படத்தில் 'கிஸிக்' என்கிற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

குட்டி ஸ்ரீலீலாவின் பரதநாட்டிய வீடியோ.. 9 வயதில் எப்படி நடனமாடியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ | Actress Sreeleela 9 Year Old Bharatanatyam Video

தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ள ஸ்ரீலீலா, தமிழில் 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இதுவரை இவருடைய நடனத்தை பார்த்து வியந்த ரசிகர்கள், முதல் முறையாக இப்படத்தில் ஸ்ரீலீலாவின் நடிப்பை பாராட்டினார்கள்.

குட்டி ஸ்ரீலீலாவின் பரதநாட்டிய வீடியோ.. 9 வயதில் எப்படி நடனமாடியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ | Actress Sreeleela 9 Year Old Bharatanatyam Video

இதனை தொடர்ந்து, தற்போது தனுஷுடன் இணைந்து 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஹிந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து இவர் நடித்து வரும் படமும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

பரதநாட்டிய வீடியோ

இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 9-வது வயதில் ஆடிய பரதநாட்டிய வீடியோவை வெளியிட்டுள்ளார். கடந்த 4-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து இந்த வீடியோவை ஸ்ரீலீலா வெளியிட்டுள்ளார். குட்டி ஸ்ரீலீலாவின் இந்த பரதநாட்டிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US