மீண்டும் ஒரு குழந்தையை தத்தெடுத்த நடிகை ஸ்ரீலீலா.. அழகிய போட்டோ இதோ
ஸ்ரீலீலா
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீலீலா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.
நடிப்பை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்து வரும் ஸ்ரீலீலா மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
அழகிய போட்டோ
இந்நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளதாக ஸ்ரீலீலா அவரது இன்ஸ்டா தளத்தில் அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்த சிறந்த செயலை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
