சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா என்ன படித்திருக்கிறார் தெரியுமா! கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி இருப்பவர் ஸ்ரீலீலா. பல முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கும் ஸ்ரீலீலா கடந்த பொங்கலுக்கு மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
22 வயது மட்டுமே ஆகும் ஸ்ரீலீலாவுக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவருக்கு 4.3 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.
டாக்டர்
ஸ்ரீலீலா முன்னணி நடிகை என்பது ஒருபக்கம் இருந்தாலும், அவர் MBBS படித்து முடித்திருக்கிறார் என்பது பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் தகவலாக இருக்கும்.
படங்களில் நடிக்கும் போது கிடைக்கும் இடைவேளையில் கூட அவர் படிப்பில் தான் கவனம் செலுத்துவாராம். அதன் மூலமாக அவர் டாக்டர் படிப்பை முடித்திருக்கிறார்.
ஸ்ரீலிலா அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.