சிம்புவை காதலிப்பதாக சர்ச்சை ஏற்படுத்திய சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிகிச்சைக்கு அனுமதி!
ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள், யாரடி நீ மோகினி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தவர் ஸ்ரீநிதி. அவர் தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறி இன்ஸ்டாகிராமில் கண்ணீர் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதன் பின் நடிகை நக்ஷத்திரா திருமணம் செய்து கொள்ள இருக்கும் நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர், அவர் மீது முதல் மனைவி கொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பின் நடிகர் சிம்புவை தான் காதலிப்பதாகவும், திருமணம் செய்து வையுங்கள் என கூறி அவரது வீட்டின் முன்பே தர்ணா செய்தார். அவர் மனஅழுத்ததால் தான் இப்படி எல்லாம் செய்கிறார் என நடிகை நக்ஷத்திரா உள்ளிட்ட பலர் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீநிதியை கவுன்சிலிங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் மீண்டும் பழைய ஸ்ரீநிதியாக திரும்ப வருவார் என நண்பர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan