பறிபோன கோடி சொத்து.. அஜித் பட நடிகை சுதா வாழ்க்கையில் நடந்த துயரம்
நடிகை சுதா
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை சுதா.

தமிழில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, வெடி, வேதாளம், 24 உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பறிபோன கோடி சொத்துக்கள்
திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது பேட்டிகளில் தங்களது வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்களை பகிர்ந்துகொள்வார்கள். அந்த வகையில், நடிகை சுதா தான் போட்ட ஒரே ஒரு கையெழுத்து மூலம் தனது தலையெழுத்து எப்படி மாறியது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

actress sudha lost crores of rupees in assets and savingsஅவர் கூறியதாவது, "என்னுடைய கையிருப்பு மொத்த பணத்தையும் போட்டு டெல்லியில் ஒரு ஹோட்டலை தொடங்கினேன்; ஆனால் நான் போட்ட ஒரே ஒரு கையெழுத்தால் என்னுடைய மொத்த சொத்தும் காணாமல் போய்விட்டது; கோடி ரூபாய்க்கு மேலே நஷ்டம்; மகனுடன் தகராறு ஏற்பட்டதால் அவர் வெளிநாட்டுக்கு போய்விட்டார்; கணவரும் என்னை விட்டு போய்விட்டார்; இப்போ நான் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறேன்" என கூறியுள்ளார்.
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri