50 வயதில் இரண்டாவது திருமணம் குறித்து ஓபனாக சொன்ன நடிகை சுகன்யா- மறுமணம் உறுதியா?
நடிகை சுகன்யா
பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பிரபலங்கள் பலர், அப்படி அவரால் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நடிகை தான் சுகன்யா.
1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சுகன்யா திறமையான நடிப்பால் பெரிய ரீச் பெற்றார்.
விஜயகாந்தின் சின்ன கவுண்டர், கமல்ஹாசனின் இந்தியன், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
குடும்பம்
இவர் 2002ம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்துகொண்ட சுகன்யா அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் 1 வருடத்திலேயே விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.
விவாகரத்திற்கு பிறகு சிங்கிளாகவே வாழ்ந்து வரும் சுகன்யாவிற்கு தற்போது 50 வயது ஆகிறது.
அண்மையில் ஒரு பேட்டியில் சுகன்யாவிடம் மறுமணம் குறித்து கேட்டபோது, அப்படி ஒரு எண்ணம் எனக்கில்லை, எனக்கு இப்போது 50 வயது ஆகிறது.
இனி கல்யாணம், குழந்தை என்று வந்தா அந்த குழந்தை என்னை அம்மா அல்லது பாட்டி கூப்பிடனுமா என்று நானே யோசிப்பேன். நான் மறுமணம் வேண்டும் என்றும் சொல்லவில்லை, வேண்டாம் என்றும் கூறவில்லை என மழுப்பலான பதில் அளித்துள்ளார்.
விக்ரம், ஜெயிலர் பட புகழ் ஜாபரின் காதலியை பார்த்துள்ளீர்களா?- வெளிவந்த போட்டோ, அழகிய ஜோடி

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
