அஜித், விஜய் படங்களில் நடித்த நடிகை சுவாதியா இது?- திருமணம், குழந்தை என எப்படி உள்ளார் பாருங்க

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகை சுவாதி
கடந்த 1995ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான தேவா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்களின் கவனத்தை பெற்றார், அதன்பிறகு அஜித் நடித்த வான்மதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து டாப் நாயகி லிஸ்டில் இணைந்தார்.
தமிழை தாண்டி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் படங்கள் நடித்துவந்த சுவாதி மாப்பிள்ளை கௌண்டர், நாட்டுப்புற நாயகன், சுந்தர பாண்டியன் என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
திருமணம்
ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய சுவாதி 2009ம் ஆண்டு தொழிலதிபர் கிரண் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆனார்.
இவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார், தற்போது சுவாதி தனது கணவர், குழந்தையுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் அட இவரா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
காதல் கொண்டேன் பட புகழ் சுதீப் சரங்கியா இது?- ஒல்லியாக அடையாளமே தெரியலையே, லேட்டஸ்ட் க்ளிக்